என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு பஸ் கண்டக்டர்"
- கண்டக்டர்கள் பணியை தொடங்கும் முன்பு போதிய சில்லறையை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
- பதிவு இணையத்தில் வெளியாகி 71 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
அரசு பஸ்களில் பயணம் செய்யும் போது கண்டக்டர் சில்லறை இல்லை என கூறுவதும், அவருடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும் பார்த்திருப்போம். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த நிதின்கிருஷ்ணா என்ற பயணி எக்ஸ் தளத்தில் தனது பெங்களூரு மாநகர பஸ் டிக்கெட்டை பகிர்ந்து ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில், நான் 5 ரூபாயை இழந்துவிட்டேன். வெறும் 5 ரூபாய் என்று பார்த்தால் அது சிறிய தொகையாக இருக்கும். அதுவே ஐந்து, ஐந்து என்று ஐந்து லட்சம் 5 ரூபாய் என்று நினைத்து பார்த்தால் பெரிய கொள்ளை தானே! பஸ் கண்டக்டர்களின் இந்த நடவடிக்கை கோபத்தை ஏற்படுத்துகிறது. இதை வழக்கமாக வைத்து அவர்கள் அதிகம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
கண்டக்டர்கள் பணியை தொடங்கும் முன்பு போதிய சில்லறையை வாங்கி வைத்து கொள்ள வேண்டும். அல்லது அதற்கு மாற்றாக ஆன்லைன் பரிவர்த்தனை ஆப்ஷன்களை தர வேண்டும் என கூறி உள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வெளியாகி 71 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. பயனர்கள் பலரும் தங்களது பயணத்தின் போது நேர்ந்த அனுபவங்களை பதிவிட்டனர்.
சில பயனர்கள் பஸ் ஏறும் போது நாம் தான் சில்லறைகளை வைத்து கொள்ள வேண்டும் எனவும், சில பயனர்கள், அரசு பஸ்களில் ஆன்லைன் பரிவர்த்தனையை பயன்படுத்த வேண்டும் எனவும் பதிவிட்டனர். இதனால் அவரது பதிவு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
I lost my 5 rs as this conductor didnt had even 1 rupee change (?) to return. Is there any solution to this? @BMTC_BENGALURU pic.twitter.com/2KFCCN5EOW
— Nithin Krishna (@N_4_NITHIN) April 14, 2024
- எங்களுக்கு எப்படி சீட்டு இல்லை என கூறலாம் எனக்கூறி 2 பேரும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
- போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூர் செல்வதற்காக அரசு பஸ் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. பஸ்சில் ரங்கசாமி (வயது 57) என்பவர் நடத்துனராக இருந்தார். பஸ் புறப்பட்டு செல்லும் நேரத்தில் 2 வாலிபர்கள் ஓடி வந்தனர்.
அவர்கள் இருவரும் நடத்துனர் ரங்கசாமியிடம் தஞ்சாவூருக்கு செல்ல வேண்டும், சீட்டு உள்ளதா என கேட்டுள்ளனர். நடத்துனர் சீட் இல்லை என தெரிவித்துள்ளார். எங்களுக்கு எப்படி சீட்டு இல்லை என கூறலாம் எனக்கூறி 2 பேரும் நடத்துனரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
திடீரென 2 பேரும் சேர்ந்து நடத்துனரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இது குறித்து உடனே திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் திருப்பூரை சேர்ந்த யுவராஜ் (21), புகழேந்தி (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
- அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்
ஈரோடு,
ஈரோடு வில்லரசம்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் மணி (53). இவரது மனைவி கவிதா. மணி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஈரோடு காசி பாளையம் கிளையில் கடந்த 22 வருடமாக கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மணி வீட்டில் அடிக்கடி பீடி குடித்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மணி கோபித்து கொண்டு மனைவி யுடன் சில நாட்கள் பேசாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மணி வேலைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி யிடம் சாப்பாடு கேட்ட போது நீங்கள் வெளியில் சாப்பிட்டு வந்து விடுவீர்கள் என நினைத்து வீட்டில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டோம் என்று கூறியுள்ளார்.
இதனால் கோபித்து கொண்டு வீட்டின் மேல் மாடிக்கு மணி தூங்க சென்று விட்டார். காலை கவிதா மாடிக்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது மணி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலையில் இருந்து தடம் எண் சி-8 அரசு டவுன் பஸ் எழுமாத்தூர் அரசு கல்லூரி வரை தினமும் சென்று வருகிறது.சென்னிமலை பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினமும் இலவச பஸ் பாஸ் மூலம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் இந்த பஸ்சில் கண்டக்டராக பணியாற்றும் துடுப்பதி கல்லாகுளத்தை சேர்ந்த அம்மாசை என்பவர் மகன் அய்யப்பன் (31) கல்லூரி மாணவிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்தாராம். தொடர்ந்து இதுபோலவே கல்லூரி மாணவிகளின் மீது மோதுவது, அவர்களின் காது அருகே வந்து சினிமா பாட்டு பாடுவது என தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பஸ்சில் கூட்டம் இல்லாத போதும் வழக்கம் போல மாணவிகளிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் வெகுண்டு எழுந்த மாணவிகள் கண்டக்டர் அய்யப்பனை பிடித்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மாணவிகளின் புகாரின் பேரில் அய்யப்பனிடம் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சுகவனம் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டார். அரசு கண்டக்டருக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மாணவிகளிடம் சமரச முயற்சி மேற்கொண்டனர்.
ஆனாலும் பாதிக்கப்பட்ட மாணவிகள் இதனை ஏற்க மறுத்து உறுதியுடன் இருந்தனர். இதனால் இரவு 10 மணிக்கு மேல் கண்டக்டர் அய்யப்பன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் கீழ் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். இன்று காலை கொடுமுடி நீதிமன்றத்தில் அய்யப்பன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூரை அடுத்த மூணான்டிபட்டியை சேர்ந்தவர் காசிமாயன். அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு நரசிங்கம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் பழக்கம் ஆனார். அவர் கியாஸ் ஏஜென்சி தொடங்க போவதாகவும் அதில் பங்குதாரராக சேருங்கள் என்றும் கூறி உள்ளார்.
இதனை நம்பி காசிமாயன் ரூ.9 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட திருநாவுக்கரசு கியாஸ் ஏஜென்சி எதுவும் தொடங்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த காசி மாயன் பணத்தை திருப்பிக் கேட்டார்.
ஆனால் அதனை திருப்பி தராமல் திருநாவுக்கரசு கொலை மிரட்டல் விடுத்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் காசிமாயன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை செக்கானூரணியை சேர்ந்தவர் விருமாண்டி (வயது 53). இவர் மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் அவர் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்திருந்தார்.
அந்த சமயத்தில் இவர் அதே பகுதியை சேர்ந்தவரும், அரசு போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தவருமான பிரபாகரன் (42) என்பவரிடம் கடந்த 10.11.2017 அன்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த விருமாண்டி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகரனை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த பிரபாகரன் இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து செக்கானூரணி போலீசார் வழக்குபதிவு செய்து விருமாண்டியை கைது செய்தனர்.
இந்த வழக்கு மதுரை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. முடிவில், விருமாண்டிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பளித்தார்.
பேரளம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் இதயத்துல்லா. இவர் நேற்று தனது 2½ வயது குழந்தையுடன் சீனிவாசபுரத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் சென்றார். அந்த பஸ்சில் பணிபுரிந்த கண்டக்டரிடம் திருவாரூருக்கு ஒரு டிக்கெட் தருமாறு கேட்டுள்ளார்.
அதற்கு கண்டக்டர், உங்கள் குழந்தைக்கும் டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இதயத்துல்லா, தனது குழந்தைக்கு 2½ வயது தான் ஆகிறது. எனவே டிக்கெட் எடுக்க தேவையில்லை என்று கூறினார்.
ஆனால் கண்டக்டரோ, குழந்தைக்கு 2½ வயது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? எனவே டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும் என்று விடாபிடியாக கூறினார். இதனால் இதயத்துல்லாவுக்கும், கண்டக்டருக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் மிகுந்த ஆத்திரம் அடைந்த இதயத்துல்லா, எனது குழந்தைக்கு 2½ வயது என்பதை நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். இருங்கள்... எனது பிறப்பு சான்றிதழை கொண்டு வருகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இதயத்துல்லா அடுத்த பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது தனது குழந்தையை கண்டக்டரிடம் கொடுத்து விட்டு குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்து வருகிறேன் என கூறி பஸ்சை விட்டு கீழே இறங்கி சென்று விட்டார். பின்னர் அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் ஏறி தனது வீட்டுக்கு சென்றார்.
இதயத்துல்லாவின் அதிரடி நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த பஸ் கண்டக்டர், அந்த குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தவித்தார். பின்னர் அவர் அந்த குழந்தையை பேரளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற இதயத்துல்லா, தனது குழந்தையின் பிறப்பு சான்றிதழை எடுத்துக் கொண்டு அடுத்த பஸ்சில் ஏறி பேரளத்துக்கு வந்தார்.
பேரளம் போலீஸ் நிலைய வாசலில் கூட்டமாக இருப்பதை கண்ட இதயத்துல்லா அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தனது குழந்தை இருப்பதை பார்த்ததும் நடந்த சம்பவத்தை தெரிவித்து தனது குழந்தையை வாங்கி சென்றார்.
சுமார் 2 மணி நேரம் போலீசாரின் பாதுகாப்பில் இருந்த அந்த குழந்தை இதயத்துல்லாவிடம் ஒப்படைத்தனர்.
டிக்கெட் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் பஸ் கண்டக்டரிடம் குழந்தையை அதன் தந்தை விட்டு சென்ற சம்பவம் பேரளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்